மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் 3-ந் தேதி குடமுழுக்கு

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ரூ. 9 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் நிறைவுபெற்று வருகிற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெறும் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்தார்.

Update: 2023-04-03 18:45 GMT

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ரூ. 9 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் நிறைவுபெற்று வருகிற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெறும் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்தார்.

மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 17 ஆண்டுக்கு முன்னர் 2005-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து இக்கோவிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, 2022-ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு,தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சாமிகள் மாயூரநாதர் கோவிலில் நேற்று திருப்பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவர், கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

ரூ.9 கோடியில் திருப்பணிகள்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த 24-வது குருமகா சன்னிதானம் கூறுகையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ரூ.9 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவுற்று, வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.

அப்போது, கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், சிவபுரம் வேதஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்