சப்த கன்னியம்மன் ேகாவில் குடமுழுக்கு

ஆக்கூர் சப்த கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு

Update: 2023-03-27 18:45 GMT

திருக்கடையூர், மார்ச்.28-

ஆக்கூர் ஊராட்சி அன்னப்பன்பேட்டையில் உள்ள சப்த கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9. 30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க விமான கலசங்களை அடைந்தன. பின்னர் ஆக்கூர் ஊராட்சி தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். இதைப்போல காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் உள்ள கால பைரவர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்