கரபுரநாதர் கோவிலில் கிருத்திகை பூஜை

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது.

Update: 2022-05-29 20:11 GMT

ஆட்டையாம்பட்டி:உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது.

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில் கிருத்திகை தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி கோவில் வளாகத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்