சுப்பிரமணியசாமி ேகாவிலில் கிருத்திகை விழா

வள்ளிமலை சுப்பிரமணியசாமி ேகாவிலில் கிருத்திகை விழா நடைபெற்றது.

Update: 2022-12-06 18:09 GMT

வள்ளிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளி. தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகை விழா நடந்தது. அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீப ஆராதனை செய்யப்பட்டு கருவறையில் உள்ள ஆறுமுக சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அனுவித்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதே போல் மலைக் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானைக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தனி சன்னதியில் உள்ள வள்ளியம்மைக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களாலும், மஞ்சள் காப்பினாலும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்