கே.ஆர். கல்வி நிறுவனங்களில்சரஸ்வதிபூஜை விழா

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களில் சரஸ்வதிபூஜை விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-24 18:45 GMT

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களான நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கே.ஆர்.எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழா துறை வாரியாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணை தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் சி.சங்கர நாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.விஜயலட்சுமி, எ.சென்னம்மாள், எ.ஷண்மதி, எ.நிதீஷ் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆலையில் சிறப்பாக மற்றும் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து வரும் பணியாளர் களுக்கும், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் எஸ்.மதிவண்ணன், ஆடிட்டர் பி.பாலசுப்ரமணியன், அரசு வக்கீல் எஸ்.வி.சம்பத்குமார், கல்லூரி டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலையின் பொது மேலாளர் எ.சங்கர், தொழிலாளர் நல அலுவலர் எஸ்.முத்துகிருஷ்ணன், பயிற்சி உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்