கோவில்பட்டிசொர்ணமலைகதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழா

கோவில்பட்டிசொர்ணமலைகதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நாளைமறுநாள்(திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கந்தசஷ்டி விழா

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணம்

நேற்று 4-வது நாள் விழாவை காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி (செவ்வாய் கிழமை)் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்