கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் முப்பெரும் விழா

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2023-07-20 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த வேலம்மாள் பள்ளி மாணவர் ஜெ.பிரபஞ்சன், பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 720-க்கு 695 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்த மாணவி கவுசிகா, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா, மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை வகித்து, சாதனை மாணவ, மாணவியருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கு ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் கோமதி, வேலம்மாள் அகாதெமி மூத்த முதல்வர் உமா மகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளித்தலைவர் முத்துச்சாமி, தாளாளர் நாகமுத்து, இயக்குனர் விஜயராணி, வேல்ஸ் கல்வி குழுமத்தின் கல்வி துறைத் தலைவர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் மூத்த முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் மலர் கொடி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்