கோவில்பட்டி- விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி- விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட அவை தலைவர் என்.கே. பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், நவ.12, 13, 26, மற்றும் 27 தேதிகளில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளிலும், மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 260 வாக்கு சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் முகாம் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், கிளை, மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வீடு வீடாகச் சென்று விடுபட்ட வாக்காளர்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து சென்று பெயர்களை சேர்க்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற சபதம் ஏற்று எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர். சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்