கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய திறனாய்வுதேர்வில் கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-07-03 15:30 GMT
கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

கோவில்பட்டி:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சண்முகப்ரியன், மாணவிகள் யூனீஸ், மாரியம்மாள் ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு பள்ளி கலையரங்கில் பாராட்டு விழா நடந்தது.

பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர்.ஏ.அய்யனார் தலைமை தாங்கினார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பாராட்டி பேசினார். பிரியா அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்