அந்தியூர் தேவி கருமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

அந்தியூர் தேவி கருமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

Update: 2023-05-04 21:30 GMT

அந்தியூர்

அந்தியூர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் குண்டம் விழா நடைபெற்றது. இதற்காக கடந்த வாரம் கோவிலில் கம்பம் நடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. இதற்காக கோவிலின் முன்பு 20 அடி நீளத்துக்கு குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அம்மை அழைத்தல், வாக்கு கேட்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் பூ சுற்றிய பிரம்பை கையில் வைத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்தனர். குண்டம் விழா முடிந்ததும் பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர். மேலும் பொங்கல் வைத்தும் சாமிக்கு படைத்தனர். நேற்று கம்பம் பிடுங்குதல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்