கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்

கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்;

Update: 2023-02-24 20:58 GMT

கொடுமுடி

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு கொடுமுடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.சின்னுசாமி தலைமை தாங்கினார். கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி மணி, கோவில் செயல் அலுவலர் யுவராஜ், வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் உமா செல்வி ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

மணமக்களுக்கு தமிழக அரசு சார்பில் 4 கிராம் தாலிக்கு தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, கட்டில், மெத்தை, மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள 21 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள், திருமண ஜோடியின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்