பச்சைமலை கோவிலில் சூரசம்ஹார விழா தொடக்கம்

பச்சைமலை கோவிலில் சூரசம்ஹார விழா தொடக்கம்

Update: 2022-10-25 21:35 GMT

கடத்தூர்

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று காலை 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் காப்பு கட்டி கொண்டனர். தொடர்ந்து யாக சாலை பூஜை நடைபெற்றது.

பகல் 12 மணிஅளவில் சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது. 12.30 மணிக்கு தங்கமயில், தங்கரத புறப்பாடு நடந்தது.

இதையொட்டி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்