ராமேசுவரம் கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி

ராமேசுவரம் கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-06 17:56 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

விழாவில் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.சாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மகர் நோன்பு திடலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து சாமி நான்கு திசைகளில் நின்று சூரனை வில் மூலம் அம்பி எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. கோவில் உதவி கோட்ட பொறி யாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாஸ்கரன், பேஸ்கார் கமலநாதன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், பா.ஜ.க கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒ.பி.சி.அணி மாவட்ட துணைத்தலைவர் கணேசன், நகர் பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்