ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதே போல் கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் இருந்து பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் வரையிலும் இலவச தரிசன மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல் புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.