கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்த கோவளம் ஊராட்சியை இணைக்க கூடாது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்த கோவளம் ஊராட்சியை இணைக்க கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-03-28 21:08 GMT

நாகர்கோவில்:

கோவளம் ஊராட்சி பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவளம் ஊராட்சியில் அதிகப்படியான மக்கள் கூலி தொழில் செய்து வருகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள். கோவளம் ஊராட்சியை கன்னியாகுமரி பேரூராட்சியுடன் சேர்த்து கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் சாதாரண ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். வீட்டு வரி, தண்ணீர் கட்டணம், வரை பட கட்டணம் போன்ற வரி விதிப்புகளால் சிரமப்படும் நிலை ஏற்படும். எனவே கோவளம் ஊராட்சி மக்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவளத்தை கன்னியாகுமரி பேரூராட்சியுடன் இணைக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்