கொத்தனார் உடல் சொந்த ஊரில் அடக்கம்

கேரளாவில் மாடியில் இருந்து விழுந்து இறந்த குமரி கொத்தனார் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Update: 2023-02-13 18:45 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லஞ்சி ஊராட்சி காட்டாவிளையை சேர்ந்தவர் கோபாலன் (வயது46), கொத்தனார். இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோபாலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குருவிபுழா என்ற இடத்தில் வேலைக்காக சென்றார். சம்பவத்தன்று இரவு அவர் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொல்லம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொல்லம் அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோபாலன் தானாக மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடைேய கோபாலனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான காட்டாவிளைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்