1,244 பேருக்கு தடுப்பூசி

Update: 2022-07-24 12:56 GMT


வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், கிராம ஊராட்சி உள்ளிட்ட 64 மையங்களில் 18 வயது முதல் உள்ள அனைத்து வயதினருக்கும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி மொத்தம் 1,244 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்