உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர். இன்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாக நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. அப்போது 33 விவசாயிகள் 160 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ 70.61 முதல் ரூ.79.05-க்கும் 2-ம் தர கொப்பரை ரூ 61.89 முதல் ரூ 69.45 க்கு இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.