ரூ.5.13 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5 லட்சத்து 13 ஆயிரத்துக்கு கொப்பரை தேங்காயம் ஏலம் நடந்தது.
பனமரத்துப்பட்டி:-
சேலம் அருகே உத்தமசோழபுரததில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்ற இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.64-க்கும், அதிகபட்சமாக ரூ.77.55-க்கும் விற்பனையானது. மொத்தம் 6.87 டன் அளவுள்ள 156 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.5 லட்சத்து 13 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.
===