கூமாபட்டி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
கூமாபட்டி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். 7 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் ஊரின் உற்சவ மண்டபத்தில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. பிறகு இரவு அம்மனை கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அதற்கு முன்பாக அம்மன் பக்தர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.