கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Update: 2023-01-30 12:15 GMT

ஈரோடு,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார். பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சி தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை. அதை யாராலும் தகர்க்க முடியாது.

அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் இங்கு வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்