கொம்மடிக்கோட்டை வாலகுருசாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

கொம்மடிக்கோட்டை வாலகுருசாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-09-08 10:48 GMT

தட்டமார்மடம்:

தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் சுவாமி உற்சவ விநாயகர், வாலாம்பிகை அம்பாள், மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் பிரகார வீதி உலா வந்து அருள் பாலித்தனர். இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கலந்து கொண்டார். இரவு உற்சவ விநாயகர், வாலாம்பிகை அம்பாள் சின்ன சப்பரத்திலும், பாலாதிரிபுரசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், நடராஜர், சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகர் சமேதராக பெரிய சப்பரத்திலும், மனோன்மணி அம்பாள் சமேதராக சந்திரசேகர் ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். தினமும் உச்சிகால பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், திருவிளக்கு பூஜை, திருவாசகம் முற்றோதல், இரவு சப்பர பவனி நடைபெற்றது. 6-ம் நாள் சாயரட்சை பூஜை, சொற்பொழிவை தொடர்ந்து, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், வாலைகுருகலா மன்றம் ஆகியவை இணைந்து 1008 விளக்குபூஜை நடத்தினர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று பிரதோஷ வழிபாடு, சுவாமிக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை பூஜை, நித்யானந்த மண்டபத்தில் அன்னதான பூஜை, மகேஷ்வர பூஜை, சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்