கொல்கத்தா பெண் பயணியின் ரூ.3 லட்சம் நகைகள் மாயம் - போலீசார் விசாரணை

நட்சத்திர ஓட்டலில் தங்கிய கொல்கத்தா பெண் பயணியின் ரூ.3 லட்சம் நகைகள் மாயமாகியதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-07-29 02:44 GMT

சென்னை, 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அசத்கர் பகுதியைச் சேர்ந்த பெண் அர்பிதா அந்திடே (வயது 44). இவர், கடந்த 3-ந் தேதி லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஒரு நாள் அங்கு தங்கி ஓய்வு எடுத்துவிட்டு கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் கொல்கத்தா சென்ற பின்னர் தனது சூட்கேசை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர், கொல்கத்தாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த புகார் சென்னை போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்