கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தைவிவசாயிகள்சங்கத்தினர் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தைவிவசாயிகள்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். கோவில்பட்டி அருகிலுள்ள செவல்பட்டி கிராமத்தில் மாந்தோப்பு விநாயகர் கோவிலை முன்னறிவிப்பு இன்றி வருவாய்த்துறையினர் இடித்ததை கண்டித்தும், மீண்டும் அந்த கோவிலை கட்டித்தர வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.