கொடிமரத்து பேச்சியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவிலில் 23-ம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் கோவில் முன்பு பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பூ மிதித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. விழாவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.