கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா
கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா நடைபெற்றது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் திருப்பூர் கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச்செயலாளர் சிவானந்த், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.