கூடலூர், மண்வயல் பகுதியில் குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

கூடலூர், மண்வயல் பகுதியில் குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

Update: 2023-02-03 18:45 GMT

கூடலூர்

கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது 291 குக்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வியாபாரி சதாம் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் கூடலூர் அருகே மண்வயல் பஜாரில் ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 135 பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வியாபாரி ராஜா (வயது 52) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்