கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு நாளை கட்டணமின்றி செல்லலாம்

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு நாளை கட்டணமின்றி செல்லலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

Update: 2023-10-06 19:45 GMT

நாடு முழுவதும் வன உயிரின வார விழா கடந்த 2-ந்தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் சார்பில் வன உயிரின வார விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லலாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் இன்று கொடைக்கானலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் இடமான ஏரிச்சாலையில் அரசு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்