பனியன் தொழிலாளி போக்சோவில் கைது

பனியன் தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2022-11-24 12:02 GMT

வீரபாண்டி

திருப்பூர் மங்கலம் சாலை இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ஆனந்த் (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்