பெண்ணுக்கு கத்திவெட்டு

நிலப்பிரச்சினையில் பெண்ணுக்கு கத்திவெட்டு

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பூட்லாயி(வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (40) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கத்தியால், பூட்லாயியின் வலது கையில் வெட்டினார்.

இதுகுறித்து பூட்லாயி கொடுத்த புகாரின் பேரில் நாகராஜ் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்