38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

Update: 2023-08-15 17:47 GMT

38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார். இதே போன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்