கீரனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கீரனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்களமேட்டை அடுத்த தபால் கீரனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.