பள்ளி மாணவி கடத்தல்
ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி இடையம்பட்டி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் வெற்றி (25) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மாணவியை கண்டித்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியை, வெற்றி கடத்தி சென்று விட்டதாகவும், மகளை கண்டுபிடித்து தருமாறும் மாணவியின் தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகின்றார்.