நர்சிங் மாணவி கடத்தல்

நர்சிங் மாணவியை கடத்திச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-13 18:45 GMT

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, திருக்கோவிலூரில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கிவிட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து மாணவியின் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகளை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கோனூர் காலனியை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ்(19) என்பவர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சந்தோசையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்