கீரனூரில் சிறுமி கடத்தலா?
கீரனூரில் சிறுமி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள கீழ நாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் ராசாத்தி (வயது 17). இவர், 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கீரனூரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பரில் இருந்து ராசாத்தி தாயாரிடம் மகளை தேட வேண்டாம் என மர்ம நபர் ஒருவர் பேசி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.