வாலிபரை தாக்கிய 2 பேர் சிக்கினர்
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
நெல்லை அருகே உள்ள அணைத்தலையூரை சேர்ந்தவர் மதன் (வயது 31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (42), மகாராஜா (24) என்பவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மதன் அணைத்தலையூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், மகாராஜா 2 பேரும் சேர்ந்து மதனை அவதூறாக பேசி கட்டையால் தாக்கினார்கள். மேலும் மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து மதன் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தார்.