மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிய சிறுமி திடீரென மாயமானாள். பெற்றோர் அவளை பல்வேறு இடங்களை தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி கடத்தப்பட்டாலா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.