கேரள அரசு பஸ்- கன்டெய்னர் லாரி மோதல்; 12 பேர் படுகாயம்

களியக்காவிளை அருகே கேரள அரசு பஸ்சும், கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள அரசு பஸ்சும், கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

கேரள அரசு பஸ்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று அதிகாலையில் ஒரு கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் களியக்காவிளை அருகே கேரள பகுதியான காராளியில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் அவற்றின் முன் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் பஸ்சுக்குள் தூக்கி வீசப்பட்டு அலறினர்.

2 டிரைவர்கள் படுகாயம்

இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரியை ஓட்டி வந்த 2 டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த சுமார் 10 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்