கெங்கை அம்மன் வெள்ளி சிரசு விழா

கே.வி.குப்பம் அருகே கெங்கை அம்மன் வெள்ளி சிரசு விழா நடைபெற்றது.

Update: 2023-02-12 16:35 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தில் கெங்கை அம்மன் வெள்ளி சிரசு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மகாதேவமலை அடிவாரத்தில் இருந்து கெங்கை அம்மன் வெள்ளி சிரசு அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காங்குப்பம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. அப்போது, மகா தேவமலை மகாநந்த சித்தர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். கெங்கை அம்மன் வெள்ளி சிரசு, கெங்கை அம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்