காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஆறுமுகநேரி:
காயப்பட்டினம் எல். கே. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் அருணாசலபுரத்தில் நடைபெற்றது. 7 நாட்கள் நடைபெற்ற இம்முகாமினை காயல்பட்டினம் நகரசபை தலைவர் கே.ஏ. எஸ். முத்து முகமது தொடங்கி வைத்தார்.
முகாமில் வீடுகளில் புள்ளி விவரக் கணக்கு சேகரித்தல், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தும் வகையில் பயிற்சி அளித்தல், பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இம்முகாம் நிறைவு விழா அருணாசலபுரம் தேசிய தொடக்கப்பள்ளியில் வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எல்.டி. சித்திக் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அஹமது முன்னிலை வகித்தார். முகமது இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறையின் சார் ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், கவுன்சிலர் கதிரவன், முன்னாள் கவுன்சிலர் திருத்துவராஜ், தேசிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.