புதா் மண்டி காணப்படும் கட்டேரி வடிகால் வாய்க்கால்

மன்னார்குடி அருகே புதா் மண்டி காணப்படும் கட்டேரி வடிகால் வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-13 18:52 GMT

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே புதா் மண்டி காணப்படும் கட்டேரி வடிகால் வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.

கட்டேரி வாய்க்கால்

மன்னார்குடியை அடுத்த மேலமறவாக்காடு அருகில் வடிகால் வாய்க்காலான கட்டேரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை மற்றும் செடிகள் அடர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது.செருமங்கலம் பகுதி ஏரியிலிருந்து தொடங்கும் இந்த கட்டேரி வாய்க்கால் சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் சென்று பாமணி ஆற்றில் கலக்கிறது.இந்த தூரத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மழைக்காலத்தில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் முக்கியமான வடிகால் வாய்க்காலாக கட்டேரி வாய்க்கால் உள்ளது.

தூர்வார கோரிக்கை

இந்த வாய்க்காலின் தலைப்பு பகுதி சுமார் 4 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தபட்ட நிலையில் மீதி உள்ள பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள், மற்றும் புதர் செடிகள் அடர்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தும் விதமாக புதா் மண்டி உள்ளது. வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இந்த புதரையும் சுத்தப்படுத்தினால் தான் மழை நேரத்தில் கூடுதல் தண்ணீர் வடிந்து விவசாய பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.எனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பயிர்களை மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க கட்டேரி வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்