கட்டாரிமங்கலம் கோவிலில்சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
கட்டாரிமங்கலம் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்பாள், சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுககு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருககு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூஜைககான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்குழு தலைவர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள், பகதர்கள் செய்திருந்தனர்.