கரூர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-01-29 18:44 GMT

வேலாயுதம்பாளையத்தில் கரூர் மாவட்ட பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், புகழூர் நகராட்சி நிர்வாகத்தின் அனைத்து ஊழல்களை கண்டித்தும் விரைவில் இங்கு கண்டன கூட்டம் நடைபெறும். வருகிற 2-ந்தேதி மத்திய அரசின் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை விளக்கி மத்திய அரசின் நிதி விளக்ககூட்டம் கரூர் மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும், மாநில தலைவர் நடை பயணத்தின்போது குறைந்தது 300 பெண்கள ஒரே நிறத்தில் சீருடையும், 100 இளைஞர்கள் தொண்டர் படையில் காவி சட்டை, பச்சை கலர் பேண்ட் அணிந்து தயராக இருக்க வேண்டும். இவர்கள் 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு இந்திய எல்லையோர பாதுகாப்பு, மத்திய அரசு காவல் துறை, ராணுவத்தில் உள்பிரிவில் காவலர்களாக அமர்த்தப்பட முன்னுரிமைகள் அளிக்கப்படும் . இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். போல பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிா்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்