கரூர் பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

கரூர் பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2022-09-27 18:38 GMT

கரூர் பஸ், ெரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனைகடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக கரூர் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி உள்ளிட்டவைகளை கொண்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ரெயிலிலிருந்து இறங்கி வெளியே வரும் பயணிகள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். இதைபோன்று கரூர் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் சோதனை செய்தனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்