கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம்

சைப்பூசத்தையொட்டி கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2023-02-05 18:45 GMT

கருமத்தம்பட்டி

சைப்பூசத்தையொட்டி கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தைப்பூசம்

கோவை மாவட்டத்தில் புகழ்மிக்க முருக தலங்களில் ஒன்றாக கருமத்தம்பட்டி விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திரு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதம் 27 -ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினசரி அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை தைப்பூச தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 4 மணிக்கு அபிஷேக பூஜை, காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேர்த்திருவிழா

மாலை 4.05 மணிக்கு மேல் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் கோவிலை வலம் வந்தது.

அதைத்தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சென்னியாண்டவர் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

பின்னர் மாலை 6 மணிக்கு வர்ணஜால வானவேடிக்கை, 6.30 மணிக்கு மேல் ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்