ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை நடந்தது.

Update: 2023-03-05 18:45 GMT

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஸ்டி வினியோகம் நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.

நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும், சுவாமி பொலிந்துநின்ற பிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 11-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்