கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
நஞ்சுகொண்டாபுரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் துரைராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கணியம்பாடி ஒன்றியக்குழு துணை தலைவர் கஜேந்திரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி செயலாளர்கள் உதயகுமார், காந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.