கஞ்சா விற்ற 3 பேர் கைது

Update: 2023-08-16 17:56 GMT


திருப்பூர் மங்கலம் சாலை கோழிப்பண்ணை பகுதியில் நேற்று சென்ட்ரல் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அழகு ராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போதுஅவ்வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததிலஅவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை சோதனை செய்தபோது 200 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மங்கலம் சாலை பாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (21) அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( 22) என்பதும் இவர்கள் பனியன் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு கஞ்சா விற்றதும் விசாரணையில் தெரியவந்து. இதேபோல் கே.வி.ஏ நகரில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஹரசாகு (27) கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. 3 பேர் மீதும் சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்