கண்மாயில் ஆண் பிணம்

கண்மாயில் ஆண் பிணம்

Update: 2022-12-29 18:56 GMT

திருப்புவனம்

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது மாங்குடி கிராமம். இங்குள்ள கண்மாய்கரையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. நேற்று காலை மீன் பிடிக்க சென்றவர்கள் இதை பார்த்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் தலைமையில் அங்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர் பச்சை கலரில் சட்டையும், கருப்பு கலரில் டவுசரும் அணிந்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்