கண்மாயில் பெண் பிணம்

கண்மாயில் மூதாட்டி பிணம் கிடந்தது.

Update: 2022-10-25 20:17 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்த கோபால்சாமி மனைவி சீனியம்மாள் (வயது 52). இவர் கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து மகன் நாராயணசாமியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சீனியம்மாளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்று விட்ட நிலையில் அவரது தாய் சீனியம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவரை தேடி சென்றபோது அதே பகுதியில் உள்ள கண்மாயில் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்